கடவுள் யாரையும் அனுப்ப மாட்டாரு.., பிரதமர் மோடியை சாடுவது போல பேசிய குஷ்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
121 பேர் மரணம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர். அப்போது, மத நிகழ்வு முடிந்ததும் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஷ்பு கருத்து
இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். கடவுள் சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாற மாட்டார்கள்.
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் அதை உணர்கிறீர்கள். இந்த பேரழிவை கடவுள் அனுப்ப முடியாது. கொல்லப்பட்ட 121 பேரும் தங்கள் கர்மாவால் உயிரிழக்கவில்லை.
குருட்டு நம்பிக்கையால் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவிகள். இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பார்க்கும் போதுதான் உண்மையாகவே 'கடவுளால் அனுப்பப்பட்டவர்' என்ற வாசகம் நியாயப்படுத்தப்படும்" என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
இவரது பதிவிற்கு கீழே ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக் கொண்டு 'Non-Biological 'என்று யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள் என்று பத்திரிகையாளர் முகமது சுபைர் மோடியை கிண்டலடித்துள்ளார்.
முன்னதாக பேசிய பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |