முடி வளர்ச்சிக்கு உதவும் கிராம்பு தண்ணீர்: கிடைக்கும் பலன்கள் என்ன?
முடி உதிர்தல், அடர்த்தியான முடி இல்லை என்பது பல பெண்களின் பொதுவான பிரச்சனைகளாக உள்ளது.
எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு இயற்கை முறை தான் கிராம்பு தண்ணீர்.
கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே,வைட்டமின் சி, நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Getty Image/ Shutterstock
மேலும் அவற்றோடு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவையும் உள்ளன.
தயாரிக்கும் முறை
கிராம்புகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.
24 mantra
பிறகு கிராம்பில் உள்ள சத்துக்கள் நன்றாக தண்ணீரில் இறங்கும் வரை காத்திருக்க வேண்டும்.
கிராம்பு தண்ணீரை உங்கள் கூந்தலில் ஸ்ப்ரே செய்து விட்டாலே போதும் கூந்தல் அடர்த்தியாகவும் நல்ல நீளமாகவும் வளரும்.
கிடைக்கும் பலன்கள்
உச்சந்தலையில் ஏற்படும் தொற்று, போதிய போசாக்கு காரணமாக கூந்தல் வளர்ச்சி குறைந்து போகும். இதனை தடுக்க கிராம்பு தண்ணீர் உதவுகிறது.
மேலும் முடி உதிர்தலுக்கு காரணமான பொடுகு மற்றும் பூஞ்சை தொற்றுக்களை போக்க உதவுகிறது.
ஆக்ஸினேற்ற அழுத்தம், அலோபீசியா போன்ற கூந்தல் உதிர்தல் பிரச்சினையை உண்டாக்குகிறது. கிராம்பில் பாலிபினால்கள் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸினேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் முடி உதிர்தலை குறைக்கிறது.
கூந்தல் சுத்தமாக இல்லாததால் அல்லது வேர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் துர்நாற்றம், ஆகியவற்றை போக்க இந்த கிராம்பு தண்ணீர் பெரிதளவில் பயன்படுகிறது.
கிராம்பு எண்ணெய் பயன்படுத்தி வருவதால் பேன் தொல்லைகள் நிரந்தரமாக நீங்கும்.
கிராம்பில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை காணப்படுகிறது. இது முடியின் தண்டை வலுப்படுத்தவும், முடி உடையாமல் காக்கவும் உதவுகிறது.
ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக தலைமுடி சிறு வயதிலேயே நரைக்க தொடுக்கும். எனவே இளநரையை தடுக்க நினைப்பவர்கள் கிராம்பு தண்ணீரை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |