தினமும் சில கிராம்புகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? சர்க்கரை நோயை துரத்தி அடிக்கலாம்
கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள்.
கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட், வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது.
கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.
கிராம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு, இன்சுலின் அளவும் சீராக இருக்கும்.
சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமெனில், கிராம்பை உட்கொண்டு வாருங்கள்.
கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.