இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த பீகார் முதல்வர்: வெளியான வீடியோ
இஸ்லாமியப் பெண் அணிந்திருந்த ஹிஜாப்பை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலுகட்டாயமாக பிடித்து இழுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப்பை இழுத்த முதல்வர்
சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதனைத்தொடர்ந்து, பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் ஆயுஷ் என்ற படிப்பு பயின்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில், முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்று மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, ஹிஜாப் அணிந்து கொண்டு ஒரு இஸ்லாமியப் பெண் மருத்துவர் சான்றிதழ் பெற மேடைக்கு வந்துள்ளார்.
அப்போது முதல்வர் நிதிஷ் குமார், அந்த பெண்ணின் ஹிஜாப்பை கீழே இழுத்து முகத்தை காண்பிக்கும்படி செய்தார்.
Bihar CM Nitish Kumar pulled the veil of a woman while distributing appointment letters to Ayush practitioners. Even Deputy CM tried to stop him. He wouldn't have done this if he was in his sense. There are several such videos of him behaving awkwardly. pic.twitter.com/M3za0FkQFe
— Mohammed Zubair (@zoo_bear) December 15, 2025
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நிதிஷ் குமாரின் இச்செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |