கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கபப்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி, சேலம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களை கரூர் சென்று நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு உத்தரவிட்டார்.
கனத்த இதயத்துடன்… pic.twitter.com/tKH9upeexa
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 27, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |