இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார்: மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

PMModi EconomicCrisis SriLankaCrisis SriLankaProtestToday SriLankaProtest CMStalin SriLankaNews
By Ragavan Apr 01, 2022 12:01 AM GMT
Report

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, தமிழக அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 2-ஆம் திகதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தது இது மூன்றாவது முறையாகும்.

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்! 

இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார்: மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை | Cm Stalin Help Sri Lanka Economic Crisis Modi

பிரதமர் மோடி உடனான சந்திப்பில்

சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் 14 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதில் இலங்கை பொருளாதார பிரச்சனை, அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனை பற்றி பேசினார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஸ்டாலின் கோரிக்கை இதனால் இலங்கையில் இருந்து அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்வாங்கும் ரஷ்ய படை! செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றம் 

இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார்: மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை | Cm Stalin Help Sri Lanka Economic Crisis Modi

16 இலங்கை தமிழர்கள்

சமீபத்தில் கூட 16 தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நிலை காரணமாக அவர்கள் தமிழ்நாடு வந்தனர். அங்கு உணவு கூட வாங்க முடியாத நிலை அவர்களுக்கு நிலவுகிறது. இவர்கள் கடல்வழியாக மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தற்காலிக இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதாரம் இன்னும் பலர் இதேபோல் தமிழ்நாட்டிற்கு வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. வடக்கு இலங்கையில் இருக்கும் தமிழர்கள், கொழும்பில் இருக்கும் தமிழர்கள், மலையக தமிழர்கள் ஆகியோருக்கு நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார் 

அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவுகள், மருந்துகளை அனுப்ப நாங்கள் தயார். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இன்னொரு நாட்டு மக்களுக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை அனுமதி வேண்டும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் இந்த கோரிக்கையை வைத்தார்.

இலங்கையில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி இல்லம்! கடும் பதற்ற நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US