13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற எனது வேண்டுகோளை கழகத்தினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்திள்ளார்.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டிய 13வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.
"பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் - வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற எனது வேண்டுகோளை கழகத்தினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும்"
— DMK (@arivalayam) August 23, 2021
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/QziDZdzWCi#DMK pic.twitter.com/hkox3XimYm
13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன்.
இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்! என தெரிவித்துள்ளார்.