ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்த தமிழர் பிரக்ஞானந்தா! குவியும் வாழ்த்துக்கள்
உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா
அஜர்பைஜானில் நடந்த உலகக்கோப்பை செஸ் போட்டியில் போராடி தோல்வி அடைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கார்ல்சன் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 91 லட்சம் பரிசுத்தொகையாக பெறுகிறார்.
தலைவர்கள் வாழ்த்து
அதேபோல் பிரக்ஞானந்தா 67 லட்சம் பரிசு பெறுகிறார். வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா பிரக்ஞானந்தாவினால் பெருமைபடுகிறது என மோடி பாராட்டியுள்ள நிலையில், உங்கள் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது என ஸ்டாலினும் கூறியுள்ளனர்.
You've done the entire country proud @rpragchess! And your story is very inspiring. My best wishes for everything the future has in store for you 🙌
— hardik pandya (@hardikpandya7) August 24, 2023
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது பதிவில், 'ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் பிரக்ஞானந்தா! உங்களின் கதை மிகவும் ஊக்கமளிக்கிறது. உங்களுக்காக அனைத்தையும் வைத்துக் கொண்டு எதிர்காலம் காத்திருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |