இந்தியா நிலவில் உள்ளது! சந்திரயான்-3 மாபெரும் பாய்ச்சல் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றிகர தரையிறக்கத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
சந்திரயான்-3
இந்தியாவையே எதிர்பார்ப்பில் ஆழ்த்திய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இந்த வரலாற்று வெற்றியை விண்வெளித்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியினரும் அயர்லாந்தில் இருந்தபடி சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடினர்.
முதலமைச்சர் வாழ்த்து
இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து பதிவில்,
'இந்தியா நிலவில் உள்ளது! சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய 4வது நாடாக இந்தியா உள்ளது.
இது ஒரு மகத்தான சாதனை. அயராது முயற்சி மேற்கொண்ட ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். சந்திரயான்-3 வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு மாபெரும் பாய்ச்சல்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |