தமிழ்நாடு அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களும் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 10 ஆம் திகதி சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், பொது நிர்வாகம், உள்துறை, காவல், இளைஞர் நலன், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், முதியோர், மாற்று திறனாளிகள் நலன், சிறப்பு திட்ட செயலாக்கம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்திற்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் நீர்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை மற்றும் பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத்துறை, சிறை, ஊழல் ஒழிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் மொழி, கலாச்சாரம், செய்தி மற்றும் தகவல் தொடர்பு, ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |