தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்னாகும்? விஜய்யின் ஜோதிடர் சொன்ன பதில்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும் என விஜய்யின் ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரும் தனுஷ்
தமிழக அரசியலில் சினிமா துறையில் இருந்து வந்தவர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.

ஆனால், கட்சி தொடங்கிய அனைத்து நடிகர்களுக்கும் இந்த வெற்றி சாத்தியமில்லை. எம்ஜிஆருக்கு பின்னர், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி. ராஜேந்தர், கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமலஹாசன் என பல நடிகர்கள் கட்சி தொடங்கியும் முதல்வர் ஆக முடியவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசியது அவர் அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் அரசியல் வருகை குறித்து முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேலிடம் ஒரு நிகழ்வில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "என்ன பொறுத்தவரைக்கும் ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு கமிட் ஆயிட்டாருன்னு வச்சுக்கோங்க. அதன் பின்னர் திமுக, அதிமுக இருக்காது. அந்த நம்பர் 2 இடத்திற்கு தனுஷ் வந்துருவாரு.

அவர் ஜாதகத்தை நான் பர்சனலா பார்த்திருக்கேன். அவரு ஜாதகம் என்னான்னு எனக்கு தெரியும். உறுதியாக இன்னொரு அதிர்ஷடமிகு ஆள் தனுஷ். இதுல அனுபவம் இருக்கா?அறிவு இருக்கான்னா உதவி செய்ய அனுபவம் அறிவும் தேவை இல்லை.
உதவி செய்ற மனசு இருந்தா போதும். அரசியல் அனுபவம் தேவையே இல்லை, நல்ல மனசு இருந்தா போதும். ரிஸ்க் எடுக்க தனுஷ் சார் தயாரா இருந்தா 2031ல இது விஜய் சார் வெர்சஸ் தனுஷ் சார்ன்னு மாறும்" என தெரிவித்துள்ளார்.
தனுஷ் தெலுங்கரா?
சமீபத்தில், அவரது தனுஷ் ரசிகர் நற்பணி மன்ற கொடி, அவரது ஜாதி கொடியின் அடையாளத்தில் உள்ளதாக சமூகவலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது.
சமீபத்தில் தனுஷ் அவர்கள் தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கு கொடி ஒன்றை அறிமுகம் செய்தார்.
— Senthilvelu V C (@Senthilveluvc) July 8, 2026
இதில் வியப்பு என்னவென்றால் அந்த கொடியின் நிறம் அப்படியே அவரின் தெலுங்கு சமூகமான கவரா நாயுடு சங்கத்தின் கொடியின் நிறத்தை அப்படியே ஒத்து இருக்கிறது.
தனுஷ் அவர்களுக்கும் அரசியல் கனவு இருக்குமோ😮..! pic.twitter.com/1Yjytz2Ctr
தமிழ்நாட்டில் தமிழர்களை விட பிற மொழி பேசுபவர்கள் அரசியலில், அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பல ஆண்டுகளாக தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், தனுஷ் தெலுங்கை மொழி பேசும் சமூகத்தை சேர்ந்தவர் எனக்கூறி, தனுஷின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தனுஷ் தெலுங்கராக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் எங்களுக்கு ஆதரவு என தனுஷ் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |