இணையவழியில் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு - மக்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்ள முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நடத்தப்படும், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முறை விருப்பமுள்ள மக்கள் சுயமாக இணைய வழியிலும் தங்களது விவரங்களை வழங்கும் வகையில், சுய கணக்கெடுப்பில்(Self Enumeration) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுய கணக்கெடுப்பு, இன்று(ஜூலை 17) தொடங்கி ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது மடிக்கணினி மூலம் இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற்று தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு மக்களும் இதில் பங்குபெற முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் அழைப்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது.

இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 17, 2026
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே,… pic.twitter.com/fvA6pX24Jq
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |