உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா? சவால் விட்ட முதல்வர் விஜய்
cm vijay challenge to release asset in madhurandhagam campaign: அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பின்னர் உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா என முதல்வர் விஜய் மதுராந்தக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மதுராந்தக இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இதில் பேசிய அவர், "நான் முதலமைச்சராக இங்க வரல இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கேன் எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு தம்பியா வந்திருக்கேன்.

எப்போது பார்த்தாலும் ஸ்டாலினை பற்றியே பேசுறீங்க என்று சொல்கிறார்கள். ஜெயித்தாலும், தோற்றாலும் அவர் தான் என் அங்கிள். ஸ்வீட் அங்கிள். இருவருக்குத்தான் போட்டி. ஒன்று தூய சக்தி தவெக,மற்றொன்று தீய சக்தி திமுக. இவ்ளோ நாளா நாம மட்டும் தான் கூவிட்டு இருந்தோம், இத இப்போ திமுகவும் சொல்ராங்க.. வாழ்க்கை ஒரு வட்டம் டா.
ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வரக்கூடாது தனி கட்சியாக பெண்கள் இளைஞர்கள் ஆதரவோடு லஞ்சம் ஊழலை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாது ஏன் இந்த திமுக சாரி கொஞ்சம் டச் விட்டிருச்சு..ஓம் சக்தி.. பராசக்தி திமுக தீய சக்தி தான் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
திமுகவிற்கு மறைமுகமாக மற்றும் பலர் உதவுகிறார்கள் மற்றும் பலர் யார் தெரியுமா அதிமுக தான். ஜெயலலிதா பற்றி தவறாக பேசியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிந்தது தெரியாமல் கூவிக் கொண்டிருக்கிறார்கள் யார் என்ன கூவினாலும் நம்ம ரூட் ஸ்ட்ரைட் ரூட் தான்.
திமுக அதிமுகவுக்கு வாக்களிப்பது பெண்களுக்கு ஆபாசமாக பேசுபவர்களை ஊக்குவிப்பதாகிவிடும் அந்த மற்றும் பலர் பாஜகவின் ஒரு கிளையாக உள்ளது. இப்போது திமுகவின் ஒரு கிளையாக மாறிவிட்டார்கள்.
உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு?
இன்ஸ்பெக்ஷனுக்கு சென்றால் நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று ஷுட்டிங் எடுக்கிறார் விஜய் என விமர்சிக்கிறார் ஸ்டாலின். நீங்கள் என்ன உங்கள் சொந்த பணத்திலிருந்தா பாலம் கட்டினீர்கள்? அல்லது கணக்கில் காட்டாத பணத்தை வைத்து கட்டினீர்களா?

ஊழலை எடுத்துச் சொன்னால் அப்போ விஜய் பிறக்கவில்லை என்று திமுக பின்னர் சொல்கிறார்கள் நான் எப்போ பிறந்தா உங்களுக்கு என்ன சார் வரலாற்று எடுத்து பார்த்தால் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரிந்து விடும்.
‘திக் ஸ்கின்' என்று சொல்வார்கள், உலகத்தில் நான் மட்டும் தான் அதற்கு உதாரணம். 34 வருசமா எல்லாத்தையும் பார்த்துவிட்டு தான் வந்துள்ளேன். எனக்கு இது புதுசில்ல. எனக்கு இது பத்தல, நிறைய எதிர்பார்கிறேன் என்று தான் தோன்றுகிறது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா?" என பேசினார்.