தவெக வேட்பாளர் உருவகேலி விவகாரம்.., மு.க ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்
Cm vijay condemns stalin for mocking tvk candidate- தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து இன்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்தத் தொகுதி தவெக வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர் என பேசினார்.
மேலும், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார்.

இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவகேலி செய்த விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
— TVK Vijay (@TVKVijayHQ) October 3, 2026
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ…
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |