தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு
தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் உத்தரவு
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு போதைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் விஜய், தற்போது முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது 4,765 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 276 கடைகள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான கடைகள் அடுத்த 2 வாரங்களுக்குள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |