போலீசே எங்களை அழைத்து போன நாடகத்தை நம்பிட்டேன் - கரூரில் முதல்வர் விஜய் பேச்சு
கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை நம்பிட்டேன் நம்பிட்டேன் என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
கரூரில் முதல்வர் விஜய் பேச்சு
கரூருக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றியுள்ளார்.
இதில் பேசிய அவர், "எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் மனதளவில் சில வலிகள் மற்றும் காயங்களை மறக்க முடியாது. எனக்கு அதிக வலியையும் காயத்தையும் தந்தது கரூர் சம்பவம்தான்.

மக்களை சந்திக்க தான் திருச்சி, அரியலூர், கரூர் என சென்றோம். அரியலூரில் கூட்டத்தை முடித்து பெரம்பூர் நோக்கி சென்ற போது, அங்கிருந்த போலீஸ் சார் கூட்டம் அதிகமாகிடுச்சு, வராதீங்க என சொன்னாங்க.
போலீஸ் சொன்ன அதை கேட்டு தானே ஆகணும், பெரம்பூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மன வலியோட அப்படியே போயிட்டோம். அடுத்து பெரம்பூர் மக்கள் கிட்ட மன்னிப்பும் கேட்டோம்.
அடுத்து நாமக்கல் முடிச்சுட்டு கரூர் போகும் போது கரூர் போலீஸ் இங்க கூட்டம் அதிகமா இருக்குனு எங்களை அலெர்ட் பண்ணிருக்கலாம்ல, ஏதோ தப்பாக இருக்கு என போலீஸ் நினைத்தால் அந்த கூட்டத்தையே ரத்து செய்யலாம்.
ஆனால் அதையெல்லாம் செய்யாமல் அந்த நெடுஞ்சாலையில் இருந்து போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகம் இருக்கு பாருங்க. நம்பிட்டேன், முழுசா நம்பிட்டேன் அந்த கரூர் போலீசை..
பேசும் போது நன்றி எல்லாம் சொன்னேன். எனக்கு தெரியாது இப்படி ஒரு நாடகம் நடக்கும்னு.. இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது? இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க. இப்படி நடந்தா அப்படி பண்ணுங்க யார் அந்த அறிவுறுத்தல் கொடுத்தது?

நம்ம அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பினு குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா. வாய் வாய்னு ஒன்னு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?
நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பணமா? ஜனமானு கேட்டா.. என் ஜனம்தான் எனக்கு முக்கியம். நான் சொன்னதை போல திமுகவால் சொல்ல முடியுமா..?
நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு,, எங்க இருக்காருன்னு தெரியாமா? ஓடு ஓடு ஓடு.. வர்றான் பாரு வேட்டைக்காரன்.. ஓடினே இருக்காரு.
இன்னொருத்தர் வெளிநாட்டில் போய் ஒளிந்து விட்டார். வெளிநாடுனு சொன்னதும் ஸ்டாலின் சார்னு நினைச்சிட போறிங்க.. எனக்கு எப்போதும் ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு.
இது சிங்கப்பூருக்கு செக்அப்க்கு போனாருல அவரு. இன்னும் தோண்ட தோண்ட எத்தனை பேர் மாட்ட போறாங்களோ.." என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |