வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய்
cm vijay says karunanidhi son in law asks bribe: வீராணம் திட்டத்திற்கு டெண்டர் வழங்க கலைஞரின் மருமகன் 2.5% கமிஷன் கேட்டதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
கமிஷன் கேட்ட கலைஞரின் மருமகன்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.
இதில் பேசிய அவர், "அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் சிலவற்றை மக்களுக்கு சொல்லனும். 3 பைல்களில் ஒரு சில சாம்பிள் பார்க்கலாமா?

1970-ல் வீராணம் திட்டத்திற்கு குழாய்கள் தயாரிக்க சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டுமெனில் கமிஷன் தர வேண்டும் என திமுக அரசில் கேட்கப்பட்டதாக அறிக்கையில் உள்ளது.
டெண்டர் வேணும்னா 2.5 சதவீதம் கமிஷன் வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக சர்க்காரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் 16 கோடிக்கு மதிப்பீடாம். 16 கோடிக்கு 2.5 சதவீதம்னா 40 லட்சம்னு கணக்காம். இந்த கணக்கு சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் தான் இருக்கு.
2001ல் இதே அவையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மேடமும் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கை பற்றி பேசி இருக்கிறார்கள்.
50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில் எடுத்தோம். அப்பதான் எல்லா கூத்து வெளிய வர ஆரம்பிச்சது. அப்படி பார்த்தா அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்திருக்கு.
கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். லோனுக்கு இஎம்ஐ கட்டுற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்கி இருக்காங்க.
1907 இல் இருந்து 1974 வரை மொத்தம் ரூ.27 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கு. இந்த 29 லட்சம் மட்டும் இல்ல இந்த முரசொலி கட்டிடம் சொல்லி அதை கட்டியதற்காக எல்லாம் கொடுத்திருக்காங்க. காசா கொடுத்திருக்காங்க, பொருளாக வாங்கி கொடுத்திருக்காங்க" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |