திமுக தீய சக்தி மட்டும் இல்லை - திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் பேச்சு
திமுக தீய சக்தி மட்டும் இல்லை என திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்த நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழக முதல்வர் விஜய் திருச்சி சென்றுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், "திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றியும், வணக்கமும். திருச்சி எப்படி தமிழ்நாட்டிற்கு இதயம் மாதிரியோ, அதே மாதிரி திருச்சி கிழக்கு மக்களும் எனது இதயத்திற்கு நெருக்கமானவர்கள்.
நாம ஆட்சிக்கு வந்த சில வாரங்கள்தான் ஆகுது. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றாா்கள். ஆனால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த அரை மணிநேரத்திலேயே ஆரம்பிச்சுட்டீங்க, பாவம் கல்யாண வீட்டுல கூட போய் பொலம்புறாங்க.
திமுக தீய சக்தி மட்டும் இல்லை
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்கு வாங்கவில்லைனு சொல்ராங்க. அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்துருக்கீங்க. எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை, எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம்.

நம்மளை கேலி பேசுற கூட்டம் இருக்கு. அப்படி பேசுறத தயவுசெய்து நிப்பாட்டாதீங்க. பேசிக்கிட்டே இருங்க. நான் மக்களுக்கு தேவையான நல்லதை செஞ்சுக்கிட்டே இருப்பேன்.
மக்களுக்கு என்கிட்ட என்ன சொல்றங்கனா, விஜய் நீ எங்களுக்காக உழைக்க வந்துருக்க. நீ எங்களுக்காக உழைக்க வந்துருக்கீங்க அந்த வேலையை நீங்க பாருங்க. உங்களை பத்தி பேசுறவங்களை நாங்க பார்த்துகிறோம் என சொல்லிட்டாங்க.
திமுகவும் மற்றும் பலரும் ஒண்ணா சேர்ந்து இந்த விஜய் ஆட்சி வந்துடக்கக்கூடாதுனு கடைசி 5 நாள் பண்ண கூத்து இருக்கே. இப்படி எல்லாம் கூட நடக்குமானு நினைச்சேன்.
திமுக ஸ்டைல்ல சொல்லனும்னா ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போ செய்தி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது நல்லது தான். இப்படிபட்ட மக்களைதான் தற்குறி தற்குறினு சொல்றாங்க. தற்குரினு சொல்ற மக்கள்தான் உங்க அரசியலை கேள்விக்குறி ஆக்கிட்டாங்க.
திமுக தீய சக்தி மட்டும் இல்லை. தூர சக்தி, கோர சக்தி, பார சக்தி" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |