ஆந்திராவை தொடர்ந்து நாளை கேரளா செல்லும் முதல்வர் விஜய்
cm vijay to visit kerala from coimbatore: தமிழ்நாடு முதல்வர் விஜய், நாளை கேரளாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா செல்லும் முதல்வர் விஜய்
நாளை கோவை செல்லும் தமிழ்நாடு முதல்வர் விஜய், காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் நூலகத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து, ரூ.200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து, கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, கோவை அவிநாசி சாலை பி.ஆர்.எஸ். (PRS) மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு ஏன் செல்ல உள்ளார் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ஆந்திராவிற்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய், அங்கு விஜயவாடா அருகே உள்ள கனக துர்கா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அதன் பின்னர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர இடையேயான கிருஷ்ணா நீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, 'விஜயவாடா உத்சவ் 2.0 ' நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதல்வா் விஜய் கலந்து கொண்டார்.