பொதுக்கூட்ட மேடையிலே மயங்கி விழுந்த முதலமைச்சர்! அதிர வைத்துள்ள மருத்துவ பரிசோதனை முடிவு
பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் உரையாற்றி கொண்டிருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக அகமதாபாத்தில் உள்ள மேத்தா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பொதுக்கூட்ட மேடையிலே முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவமனைியில் முதல்வர் விஜய் ரூபானிக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Gujarat CM Vijay Rupani collapses during the speech in Vadodara. At present his health is stable#Ahmedabad #Gujarat#VijayRupani pic.twitter.com/08V5uhxwR1
— Aaquib Chhipa (@AcAaquib) February 14, 2021
நேற்று ரூபானியுடன் பொதுக்கூட்ட மேடையில் பலர் பங்கேற்றனர் என்பது நினைவுக் கூரத்தக்கது. அவர் மேடையிலிருந்து இறங்கி சென்ற போது முகக் கவசம் அணியாமல் காணப்பட்டார்.
He is alright, this video is right after the moment, he is walking without any support, God Bless ?#VijayRupani pic.twitter.com/oYNdcNHf9D
— Gopal Goswami (@gopugoswami) February 14, 2021