ரொனால்டோவால் பல பில்லியன்களை இழந்த கோகோ கோலா
போர்த்துகல்- ஹங்கேரி அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளுக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் ரொனால்டோவின் செயல் தற்போது கோகோ கோலா நிறுவனத்திற்கு பல பில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திங்கட்கிழமை, ஹங்கேரிக்கு எதிரான போர்த்துகல் விளையாட்டுக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில், ரொனால்டோ கோகோ கோலாவின் இரண்டு போத்தல்களை தனது அருகிலிருந்து அகற்றினார்.
மேலும், அதற்கு பதிலாக தண்ணீர் போத்தல்களை பயன்படுத்தவும் கோரிக்கை வைத்தார். யூரோ கிண்ணம் விளையாட்டு போட்டிகளில் முக்கிய விளம்பரதாரர்களில் ஒரு நிறுவனமான கோகோ கோலா, ரொனால்டோவின் இந்த செயலால் தற்போது பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கோகோ கோலா நிறுவனம் பல பில்லியன் டொலர்கள் இழப்பை எதிர்கொள்ளலாம் என்றே தெரிய வந்துள்ளது. அதாவது பங்குச்சந்தையில் கோகோ கோலாவின் மதிப்பு 1.6% சரிவை சந்தித்த நிலையில், 242 பில்லியன் டொலராக இருந்த கோகோ கோலா நிறுவனத்தின் மொத்த மதிப்பு தற்போது 238 பில்லியன் டொலராக சரிந்துள்ளது.
ரொனால்டோவின் அந்த ஒரு செயல் கோகோ கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.