இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு
உலக புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான கோகா-கோலா (Coca-Cola), அதன் இந்திய பிரிவான Hindustan Coca-Cola Beverages Pvt Ltd (HCCB) நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
இந்த IPO (Initial Public Offering) மூலம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை முதலீட்டை திரட்டும் நோக்கம் உள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், இதற்கான முதலீட்டு வங்கிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
ஆனால், சமீபத்தில் கோகா-கோலா நிறுவனம் பல முதலீட்டு வங்கிகளுடன் ஆலோசனைகள் நடாத்தியுள்ளதாகவும், IPO 2026-ஆம் ஆண்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட HCCB நிறுவனம், 12 மாநிலங்களில் 14 உற்பத்தி மையங்களை இயக்கி வருகிறது.
2 மில்லியனுக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கு சேவை வழங்கி, 5,200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
சமீபத்தில் HCCB-யின் தாய் நிறுவனமான Hindustan Coca-Cola Holdings நிறுவனத்தில், Jubilant Bhartia Group சிறிய பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த IPO நடைமுறைக்கு வந்தால், இந்திய துணை நிறுவங்களை பட்டியலிடும் உலக நிறுவங்களின் தொடரில் கோகா-கோலாவும் இணையும்.
இதற்கு முன் LG மற்றும் Hyundai நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் வெற்றிகரமாக பட்டியலிடப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hindustan Coca-Cola IPO 2026, Coca-Cola India bottling unit listing, HCCB IPO news 2025, Coca-Cola $1 billion IPO India, Global firms listing in India, HCCB stock market debut, Coca-Cola India expansion, Jubilant Bhartia Coca-Cola stake, Indian beverage sector IPOs, Bengaluru Coca-Cola bottling plant