கொகைன் கொடிய போதைப்பொருள் அல்ல! பிரபல நாட்டின் ஜனாதிபதி சர்ச்சை பேச்சு
கொலம்பிய அதிபர் கஸ்டவோ பெட்ரோ, கொகைன் உலகின் மிகக் கொடிய போதைப்பொருட்களில் ஒன்று அல்ல என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க போராடி வரும் நிலையில், கொலம்பிய அதிபரின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொலம்பியாவில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் பேசிய கஸ்டவோ பெட்ரோ, மதுபானங்களுடன் ஒப்பிடும்போது கொகைன் அவ்வளவு கொடிய போதைப்பொருள் அல்ல என்பது அறிவியல் உண்மை என்று கூறினார்.
மேலும், கொகைனுக்கு உலகளவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தால் அதன் பயன்பாடு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மெக்சிகோ, தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து கொகைன் கடத்தப்பட்டு உலகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கொலம்பிய அதிபரின் கருத்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கொலம்பிய அதிபர் கஸ்டவோ பெட்ரோவின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரிடமும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |