தொண்டை குழியில் சிக்கிய கரப்பான் பூச்சி: 58 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சீனாவில் தூக்கத்தில் தற்செயலாக கரப்பான் பூச்சியை மூச்சுக் குழாய்க்குள் உள்ளிழுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சுக் குழாய்க்குள் சிக்கிய கரப்பான் பூச்சி
சீனாவின் ஹைக்கோவில் வசிக்கும் 58 வயதான ஒருவர், தூக்கத்தில் தற்செயலாக கரப்பான் பூச்சியை மூச்சுக் குழாய்க்குள் உள்ளிழுத்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அவர் தூக்கத்தில் இருந்து எழுந்த போது, தனது மூக்கில் ஏதோ ஊர்ந்து செல்வதை உணர்ந்த அவர், அதை வெளியேற்ற முயற்சி செய்ததும் அது தொண்டைக்குள் சென்றுவிட்டது.
இருமல் செய்தும் அதை வெளியேற்ற முடியாத நிலையில், அவர் மீண்டும் தூங்கி விட்டார்.
இந்த சம்பவத்தை முதலில் புறக்கணித்த அந்த நபர், தனது வழக்கமான வாழ்க்கையை தொடர்ந்து வந்தார், ஆனால் அடுத்த சில நாட்களில் அவருக்கு தொடர்ந்து வாயு துர்நாற்றம் மஞ்சள் நிற சளி இருமல் வெளியேற்றம் ஆகியவற்றை உணர்ந்த பிறகு மருத்துவரை நாடினார்.
தெரியவந்த உண்மை
Hainan மருத்துவமனையில், டாக்டர் லின் அவரது நுரையீரலின் கீழ் வலது பகுதியில் ஒரு வெளிநிலைப் பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தார்.
பின் பிராங்கோஸ்கோபி, காற்றுப் பாதையை ஆய்வு செய்யும் நடைமுறை கரப்பான் பூச்சியை உறுதிப்படுத்தியது.
இறுதியில் பூச்சியும் அதை சுற்றியிருந்த சளியும் அகற்றப்பட்டு, பகுதி நன்கு சுத்தம் செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் முழுமையாக குணமடைந்து, அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |