நாவூறும் சுவையில் தேங்காய் பால் ரசம்.., இலகுவாக செய்வது எப்படி?
மதிய வேளையில் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் துணை புரியும்.
பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம் என்று ரசத்தில் பல வகைகள் உள்ளன.
அந்தவகையில் தற்போது சுவையான தேங்காய் பால் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்
- புளி- சிறிதளவு
- தக்காளி- 2
- மிளகு- ஒரு ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 1
- பூண்டு- 5 பல்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- நெய் - ஒரு ஸ்பூன்
- கடுகு- ஒரு ஸ்பூன்
- உளுந்து- ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- தேங்காய்ப்பால் - ½ லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுக, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதற்கடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அந்த கலவையில் புளிக்கரைசல் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
இறுதியாக இதில் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |