காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தலைமுடிக்கு தடவவே தேங்காய் எண்ணைய் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனை குடிப்பதாலும், சமையலில் பயன்படுத்துவதாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்க பெறுகின்றன.
ஒருவர் தினமும் காலையில் 1-2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் தேங்காய் எண்ணெய் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: இந்த கீரை இலையை ரசம் போல வைத்து சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள்!
தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.
உடலின் ஆற்றலை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும்.