காபி குடிப்பதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள்!
காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது பலருக்கும் பழக்கமாகி விட்டது.
காபியின் சுவையை தாண்டி அதில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?
காபி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது உங்கள் அமைப்பை ஊக்குவிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.
சோர்வான உங்கள் உணர்ச்சியை சில நேரத்திற்கு மறக்கடிக்க செய்யும் காபி. காப்ஃபைன் என்ற ஊக்குவிக்கி அதில் உள்ளதால், கொஞ்ச நேரத்திற்கு உங்களால் ஆற்றலுடன் செயல்பட முடியும்.
காபியில் உள்ள காப்ஃபைன் அடினோசினை (நரம்பியகடத்துகை) தடுக்க உதவும். இதனால் நரம்பணுக்களை சூடேறும்.
கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
சில வாழ்வு முறை நிலைகளை பொறுத்து, காபி உங்கள் ஆயுளை நீடிக்க உதவும் என நம்பகத்தன்மையுள்ள சில ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
சில இதய பிரச்சனைகளை தடுக்க காபி உதவுகிறது. காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் கூட ஒன்றாகும்.