தமிழகத்தையே உலுக்கி வரும் கோவை மாணவி விவகாரம்! குண்டுகட்டாக பள்ளி முதல்வரை தூக்கிய பொலிசார்: முழு விபரம்
தமிழகத்தின் கோயமுத்தூரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.
தொடர் பாலியல் துப்புறுத்தல்களால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை பொலிசார் கைது செய்தனர்.
அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவியை பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்ததும், பள்ளியை விட்டு வெளியேறி வேறு பள்ளிக்கு மாணவி சென்ற பின்பும் மாணவியை துன்புறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர் துன்புறுத்தல்கள் குறித்து அந்த மாணவி தனது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மீரா ஜாக்சன் எந்த ஒரு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை விவகாரம் பெரிய அளவில் தெரியவந்ததால், கோயத்தூரில் போராட்டம் வலுத்தது.
பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என்று நேற்று பள்ளி வளாகம் முன் பொது மக்கள் போராடி வந்தனர். மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய எல்லோரையும் கைது செய்ய வேண்டும்.
முக்கியமாக முதல்வர் மீரா ஜாக்சன்தான் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை முதலில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. ஆனால் தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்து மீரா ஜாக்சன் தலைமறைவானார்.
இவரை கைது செய்வதற்காக பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பள்ளியில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, இதில் அவரின் உறவினர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீரா ஜாக்சனுக்கு பெங்களூரில் சில உறவினர்கள் இருப்பது தெரிய வந்தது.
அதோடு இவருக்கு கேரளாவிலும் உறவினர்கள் இருப்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே மீரா ஜாக்சன் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.
இதனால் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசாரின் ஒரு குழு பெங்களூர் விரைந்தது. இன்னொரு குழு கேரளாவிற்கு விரைந்தது.
பெங்களூரில் பொலிசார் நடத்திய சோதனையில் மீரா ஜாக்சன் தனது உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீரா ஜாக்சனை கோயமுத்தூர் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளியில் உள்ள மேலும் சில ஆசிரியர்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பின் கைதாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.