பாக்கெட்டில் ரூ.400 வைத்திருந்த கோயம்புத்தூர்க்காரர்! கோடீஸ்வரராக மாறியது எப்படி?
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர் தனது கடின உழைப்பு, விடா முயற்சியின் மூலம் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்திற்கு அதிபதி ஆகியுள்ளார்.
யார் அவர்?
தமிழக மாவட்டமான கோயம்புத்தூரில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் வேலுமணி (Arokiaswamy Velumani). இவரது தந்தை விவாசாய வேலையிலும், தாயார் கூலி வேலையிலும் ஈடுபட்டு வந்தனர்.
தாயாரின் சம்பளம் வாரத்திற்கு ரூ.50 மட்டுமே. இதனால், உடைகளை வாங்கி கொடுத்து கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு வறுமை இருந்தது.
இருந்தாலும், அவரது பெற்றோர் பிகாம் வரை படிக்க வைத்தனர். பின்பு, கல்லூரி படிப்பை முடித்த வேலுமணி பாரா மெடிக்கல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால், அந்த நிறுவனம் 4 ஆண்டுகளில் மூடப்பட்டதால் வேலையின்றி தவித்துள்ளார். பின்னர், பாக்கெட்டில் வைத்திருந்த 400 ரூபாயை வைத்துக்கொண்டு மும்பைக்கு வேலைதேடி சென்றார்.
அங்குள்ள பார்க் என்ற நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது தான், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வேலுமணிக்கு வந்துள்ளது.
தைரோகேர் டெக்னாலஜிஸ் (Thyrocare Technologies)
பின்னர், தனது பிஎஃப் (PF) பணத்தை எடுத்து தைரோகேர் டெக்னாலஜிஸ் (Thyrocare Technologies) என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனத்தை1996 -ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்தே நன்றாக வளர்ந்த நிறுவனமானது 2021 -ம் ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.
பின்னர், பார்ம் ஈசி நிறுவனத்திற்கு தன்னுடைய 66 சதவீத பங்குகளை விற்பனை செய்தார். தைகேர் நிறுவனம் மட்டுமல்லாமல் நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் வேலுமணி பணியாற்றியுள்ளார்.
Thyrocare Technologies Ltd எனப்படும் Diagnostics மற்றும் ஆய்வகத்தின் நிறுவனரான வேலுமணி இன்று ரூ.1,400 கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |