கல்லூரி படிப்பை கைவிட்டு வெறும் 50 ரூபாயுடன் நாட்டைவிட்டு வெளியேறியவர்: இன்று ரூ 15,000 கோடிக்கு அதிபதி
வெளிநாடுகளில் குடியிருக்கும் பெரும் கோடீஸ்வர இந்தியர்களில் முதலிடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் தற்போது 75 வயதாகும் PNC மேனன்.
வெறும் ரூ 50 உடன்
கேரள மாநிலத்தில் பிறந்த PNC மேனன் தமது 10 வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்ப சூழல் காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டார். அப்போதைய பண மதிப்பில் வெறும் ரூ 50 உடன் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி புறப்பட்டார்.
ஆனால் தற்போது அவரது சொத்து மதிப்பானது 180 கோடி அமெரிக்க டொலர் அதாவது சுமார் ரூ 1,5000 கோடி என்றே கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகள், பிரித்தானியா மற்றும் இந்தியாவில் கிளை பரப்பியுள்ள சோபா குழுமத்தின் நிறுவனர் தான் புத்தன் நெடுவகாடு செந்தமராக்ஷா மேனன் என்ற இந்த PNC மேனன்.
குடும்ப சூழல் மற்றும் தொழில்முனைவோர் கனவுகளால் தூண்டப்பட்ட மேனன் கேரள வர்மா கல்லூரியில் தனது படிப்பை பாதியில் கைவிட்டார். தொடர்ந்து 1976ல் ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு புறப்பட்டார்.
1977ல் S&T என்ற தமது முதல் நிறுவனத்தை ரூ 75,000 கடனாக பெற்று இன்னொருவருடன் இணைந்து துவங்கினார். வாய்ப்புகள் குவிய 1984ல் ஓமன் நாட்டிலேயே முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக S&T மாறியது.
சோபா குழுமத்தின் சந்தை மதிப்பு
1990களில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் எதிர்காலம் இருப்பதாக மேனன் கண்டறிந்தார். மட்டுமின்றி, இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவுடன் 1995ல் சோபா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார்.
மத்திய கிழக்கிலும் கட்டுமான நிறுவனங்களை உருவாக்கினார். 2009ல் வெளிநாட்டு வாழ் இந்திய கோடீஸ்வரர்களுக்கான உயரிய விருத்தை இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
வளைகுடா நாடுகளில் முதன்மையான கட்டுமான நிறுவனங்களில் PNC மேனனின் சோபா குழுமமும் ஒன்று. இந்தியாவில் சோபா குழுமத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 9700 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |