உள்ளாடைகளுக்கு மட்டும் என்று மிகப்பெரிய ஒன்லைன் கடையை நிறுவிய பெண்: அவரது மொத்த சொத்து மதிப்பு
பொதுவாக உள்ளாடைகளைப் பற்றிய விவாதங்கள் பாரம்பரியமாக தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் ஒரு சமூகத்தில், உள்ளாடைகளுக்கு மட்டும் என்றே கடையை திறந்தவர் ரிச்சா கர்.
உள்ளாடைகளுக்கு மட்டும்
இவரது Zivame என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளாடைகள் தொடர்பான ஷொப்பிங் அனுபவத்தை தலைகீழாக மாற்றியதுடன், சமூக விதிமுறைகள் மீது கேள்வி எழுப்பியது.
1980ல் ஜாம்ஷெட்பூரில் பிறந்த ரிச்சா கர், முதுகலை பட்டயப் படிப்பை முடித்த பிறகு 2007ல் தொழில் முனைவோராக களமிறங்கினார். தொடக்கத்தில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ரிச்சா கர், உள்ளாடைகளுக்கான சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.
இந்த நிலையில் 2011ல் பெண்களுக்கான உள்ளாடைகள் கடை ஒன்றை Zivame என்ற பெயரில் ஒன்லைனில் தொடங்கினார். மட்டுமின்றி, இவரது கடையில் 5,000 டிசைன்களில், 50 வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் 100 வெவ்வேறு அளவுகளில் ஈர்க்கக்கூடிய தொகுப்பை அறிமுகம் செய்தார்.
இதுவே, பெண்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்க்க வைத்தது. மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவமைப்புகளில் உள்ளாடைகள் வேண்டும் என்றும் கோரிக்கைகள் குவிந்தன.
நம்பிக்கையைப் பெறுவதே நோக்கம்
உள்ளாடைகள் மட்டுமே விற்பது என முடிவு செய்திருந்த Zivame நிர்வாகம், படிப்படியாக பெண்களுக்கான ஆடைகள் பலவற்றை அறிமுகம் செய்யத் தொடங்கியது. ஒருமுறை Zivame தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் மீண்டும் தங்களையே நாடும் வகையில் நம்பிக்கையைப் பெறுவதே தங்களின் நோக்கம் என்றும் ரிச்சா கர் தெரிவித்துள்ளார்.
Zivame ஒன்லைன் கடை பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் 2016 முதல் Zivame Studios என்ற பெயரில் முக்கிய நகரங்களில் கடைகளை திறந்தார். ஆனால் 2017ல் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேறியிருந்தாலும், தொடர்ந்தும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகிறார் ரிச்சா கர்.
இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 749 கோடி என்றே கூறப்படுகிறது. 42 வயதான ரிச்சா கர் தற்போது அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வருகிறார். 2020ல் இவரது Zivame நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் Reliance Retail நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |