37 ஆண்டுகள் கழித்து மகா கும்பமேளாவில் சந்தித்த கல்லூரி நண்பர்கள்
37 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளாவில் இரு கல்லூரி நண்பர்கள் சந்தித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
நண்பர்கள் சந்திப்பு
கோலாகலமாக நடைபெற்ற மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா 2025 நிறைவடைந்தது. இந்த விழாவில் பல்வேறு அதிசய நிகழ்வுகள் நடந்துள்ளன.
அந்தவகையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கல்லூரி நண்பர்கள் சந்தித்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1988-ஆம் ஆண்டு ஒரே கல்லூரியில் படிப்பை நிறைவு செய்தவர்கள் சஞ்சீவ் குமார் சிங் மற்றும் ரஷ்மி குப்தா. இவர்கள் இருவரும் மகா கும்பமேளாவில் சந்தித்து பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் சஞ்சீவ் சிங் பேசுகையில், "37 ஆண்டுகள் கழித்து என் வகுப்புத் தோழி ரஷ்மியை சந்தித்துள்ளேன். நாங்கள் 1988-ஆம் ஆண்டு மாணவர் குழுவைச் சேர்ந்தவர்கள்.
மகா கும்பமேளாவில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, லக்னோவில் உள்ள ஒரு கல்லூரியில் ரஷ்மி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்" என்றார்.
அதேபோல ரஷ்மி குப்தா பேசுகையில், "கல்லூரி முடித்த பிறகு 37 ஆண்டுகள் கழித்து நாங்கள் சந்தித்துள்ளோம். கல்லூரி காலங்களில் சஞ்சீவ் குமார் சிங் யாரிடமும் பேச மாட்டார். மிகவும் அமைதியாக இருப்பார்.
ஆனால், தற்போது தீயணைப்பு அதிகாரியான சஞ்சீவ் உள்ளார். இவரது ஆளுமை மற்றும் குணம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதனை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |