கொலம்பியாவில் வெடித்த நிலக்கரி சுரங்கம்: 11 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பு விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் சுரங்க விபத்து
மத்திய கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் குறைந்தது 11 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 10 பேர் வரை சுரங்க இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளியின் கருவி ஒரு தீப்பொறி ஏற்படுத்திய பின்னர், வெடித்த வாயுக்களின் திரட்சியின் காரணமாக Sutatausa நகராட்சியில் விபத்து ஏற்பட்டது என ப்ளூ ரோடியோவிடம் ஆளுநர் நிக்கோலஸ் கார்சியா தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்க வெடிப்பு விபத்தானது, செவ்வாய் கிழமை இரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி தீவிரம்
விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் வரையிலான சுரங்கத் தொழிலாளர்கள் 900 மீட்டர் (2,950 அடி) நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.
இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களுக்கு அணுகல் கடினமாக உள்ளது என ஆளுநர் கார்சியா தெரிவித்துள்ளார்.
Reuters
எண்ணெய் மற்றும் நிலக்கரி ஆகியவை கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாகும், அங்கு சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
கடந்த ஆகஸ்டில், மத்திய குண்டினமார்கா திணைக்களத்தில் இடிந்து விழுந்த சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து ஒன்பது சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
Reuters

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.