சிறிய தீப்பொறியால் வெடித்த சுரங்கம்: பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளர்கள்
கொலம்பியா நாட்டில் சுரங்க தொழிற்சாலை வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்து 21 தொழிலாளர்கள் உயிரிழந்தாக கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.
திடீரென வெடித்த சுரங்கம்
கொலம்பியா நாட்டில் சுடடெளசாவிலுள்ள ஒரு சுரங்க தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடம் இடித்து 21 தொழிலாளர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
@stringer, AP
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மத்திய கொலம்பியாவிலுள்ள எண்ணெய் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில், தொழிலாளி ஒருவரது கருவியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், வாயுக்கள் தீப்பிடித்து வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இதில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் குண்டினமார்கா மாகாணத்தின் ஆளுநர் நிக்கோலஸ் கார்சியா, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.
@stringer, AP
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் “துரதிர்ஷ்டவசமாக இப்போது யாரும் உயிருடன் இல்லை. நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
தொடரும் விபத்துகள்
மீட்புக் குழுவினர் ஆறு சுரங்கங்களில் சுரங்கத் தொழிலாளர்களைத் தேடியுள்ளனர். சுரங்கங்களில் காற்றோட்டம் சரியாக இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
@stringer, AP
எண்ணெய் மற்றும் நிலக்கரி கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாகும், அங்கு சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
@AFP
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய குண்டினமார்காவிலுள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததிலிருந்து ஒன்பது சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில், கொலம்பியா நாட்டில் சுரங்க சம்பவங்களால் 148 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.