கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த பல கட்டிடங்கள்: 50 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கொலம்பியாவில் நிலநடுக்கம்
மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடலோர பகுதியான சோகோ மாகாணத்தில் இந்த 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 107 கிலோமீட்டர் மையத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சோகோ மாகாணத்தின் தலைநகர் கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
மேலும் இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 50 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தீவிரம்
சாண்டியாகோ நகரில் குறைந்து 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாகவும், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் முக்கியமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் வரை உணரப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |