ஜங்க் ஃபுட் சட்டத்தை அமுல்படுத்திய உலகின் முதன் நாடு! ஒவ்வொரு வருடமும் கூடும் வரி..
ஜங்க் ஃபுட் சட்டத்தை (Junk Food Law) அமுல்படுத்திய உலகின் முதன் நாடு என்ற பெருமையை கொலம்பியா பெற்றுள்ளது.
மக்களின் வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்த உலகின் முதல் 'ஜங்க் ஃபுட் சட்டத்தை' கொலம்பியா அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்.
கொலம்பியா சமீபத்தில் பல நோய்களை எதிர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு வரி விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, டைப் 2 நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களை சமாளிக்க தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சர்க்கரை பானங்களுக்கு கூடுதல் வரியை விதிக்கிறது.
முதற்கட்டமாக இப்போது 10 சதவீத வரி உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது, இது அடுத்த ஆண்டு 15 சதவீதமாகவும், இறுதியில் 2025-ல் 20 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ready-to-eat உணவுகள், உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) அதிகம் உள்ள தயாரிப்புகள் மற்றும் Cold Cuts என்று சொல்லக்கூடிய இறைச்சி உணவுகள், சாக்லேட்டுகள் மற்றும் கோதுமை பொரி போன்ற Puffed grain cereals மீது இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில அறிக்கைகளின்படி, ஒரு கொலம்பியன் ஒரு நாளைக்கு 12 கிராம் உப்பை உட்கொள்கிறான். அதாவது லத்தீன் அமெரிக்காவில் உப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதிகப்படியான சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
உண்மையில், கொலம்பியாவின் மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில், ஆரோக்கியமற்ற சில்லறை உணவை சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தின்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்ற ஆரோக்கியமற்ற பொருட்கள் அதிகம் உள்ள உணவுகளில் கொலம்பியா சுகாதார எச்சரிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Colombia junk food law, Colombia levying tax on ultra-processed food, sugary drinks