ட்ரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடு... புலம்பெயர்ந்தோருடன் விமானம் தரையிறக்கவும் தடை
நாடுகடத்தப்பட்ட கொலம்பிய மக்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானங்கள் இரண்டை கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தனது நாட்டில் தரையிறங்குவதைத் தடுத்த நிலையில் மோதல் வெடித்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கை
இந்த நடவடிக்கை அவசரகால வரிகள் மற்றும் பிற பழிவாங்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தூண்டியதாக கூறப்படுகிறது.
தமது சமூக ஊடக பக்கத்தில், கடும் விமர்சனம் முன்வைத்துள்ள டொனால்டு ட்ரம்ப், கொலம்பிய மக்களை சட்டவிரோத குற்றவாளிகள் என்றும், அந்த நாட்டின் ஜனாதிபதியை மக்களிடையே செல்வாக்கு இல்லாத நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்க தேசிய பாதுகாப்பையும் பொது பாதுகாப்பையும் ஜனாதிபதி பெட்ரோ ஆபத்தில் ஆழ்த்தியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், தமது நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்காவிற்கு கொலம்பியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 50 சதவிகிதமாக இரட்டிப்பாக்குதல், கொலம்பிய அரசாங்க அதிகாரிகள் மீதான தடை மற்றும் விசா ரத்து,
துவக்கம் மட்டுமே
அந்த நாட்டின் நட்பு நாடுகள் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை, அத்துடன் அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கொலம்பிய நாட்டினருக்கும் சரக்குகளுக்கும் மேம்பட்ட சோதனைகள் என கடுமையான பதிலடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் துவக்கம் மட்டுமே என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை அதிகரிக்க பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா கொலம்பியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், கச்சா பெட்ரோலியம், காபி மற்றும் பூக்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றது.
இதனிடையே அமெரிக்க அதிகாரிகளின் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மெக்சிகோவும் இதேபோன்று அமெரிக்க விமானத்தைத் தரையிறக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |