நடுவானில் மோதிக் கொண்ட இராணுவ விமானங்கள்: பரபரப்பு வீடியோ காட்சி
கொலம்பியாவில் சாகச பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
மோதிக் கொண்ட விமானங்கள்
கடந்த சனிக்கிழமை கொலம்பியா நாட்டில் உள்ள அபியாய் விமானப்படை தளத்தில் இருந்து பறந்த விமானங்களில் இராணுவ விமானிகள் சாகச பயிற்சியை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது கிட்டத்தட்ட 5 விமானங்கள் ஒன்றாக பறந்து கொண்டு இருந்த நிலையில், இரண்டு இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு வானிலேயே தீ பிடித்து தரையில் விழுந்தது.
Colombian Air Force Fighter Planes Collide Mid-Air, Resulting in Tragic Deaths of Two Pilots#BreakingNews #ColombianAirForce #TragicAccident #FighterPlanesCollision #ApiayAirBase #TrainingExercise pic.twitter.com/r5ObxmCaQK
— Rafia Tasleem (@rafia_tasleem) July 2, 2023
இதில் விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக விசாரணை
இந்நிலையில் விபத்து எவ்வாறு ஏற்பட்டது அதற்கான சூழல் குறித்து கொலம்பியா நாட்டு விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் இரண்டு இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Kfir fighter jet from Colombian #AirForce .@JamilKh15378681 @Humairkhan4561 @ThunderingVipe2 @TurgotandNecker @Gumnaam_Sipahie pic.twitter.com/ONVFeum3hm
— blue-boy-786 (@blueboy7862) January 10, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |