51 வயதில் கருணை கொலை செய்யப்படும் தாய்! ஏன் தெரியுமா? 22 வயது மகன் கண்ணீர்
தென் அமெரிக்காவில் உள்ள நாட்டில் 51 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கருணைக் கொலை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள Colombia-வைச் சேர்ந்தவர் Martha Sepúlveda. 51 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Lou Gehrig's எனப்படும் amyotrophic lateral sclerosis நோயாள் கடும் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணை கொலை செய்ய அனுமதி வாங்கியுள்ளார்.
இது குறித்து Martha Sepúlveda கூறுகையில், என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் உரிமையாளர் கடவுள் என்று தான் கூறுவேன். அவர் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது. பலருக்கு நான் எடுத்திருக்கும் முடிவு தவறு என்பது போன்று தெரியும்.
ஆனால் படுக்கை, படுக்கையாக இறக்கப் போவதில்லை என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். Martha Sepúlveda தன்னுடைய கட்டை விரல்களில் பலவீனத்தை உணர்ந்த போது உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரால் பேனா, கம்ப்யூட்டர் மவுஸ் போன்றவைகளை எடுத்து வைப்பதே பெரும் சிரமமாக இருந்து வந்துள்ளது. இதற்காக சில மாதங்கள் அவர் மருத்துவமனையில் சோதனை செய்து வந்த போது, அவருக்கு நரம்பு மண்டல நோய் ஏற்பட்டு, அவரது தசைகளை பலவீனப்படுத்தியுள்ளது தெரியவந்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு அவரின் நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்கு இறந்தேவிடலாம் என்றளவிற்கு அவருக்கு தோன்றியது. 1997-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாட்டில் கருணைக் கொலை செய்வதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை அரசாங்கம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒழுங்குப்படுத்தியது. கடந்த ஜுலை மாதம் 22-ஆம் திகதி கொலம்பியா உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை திருத்தியது.
அதில், நோயாளிகளின் உடல்ரீதியான, மனக் காயம், தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையின் கீழ் இறக்கலாம் என்று குறிப்பிட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இது குறித்து Martha Sepúlveda பதிவிட, அவருக்கு அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இவருக்கு 22 வயது மகன் உள்ளார். அவர் தற்போதை நான் என்னுடைய தாயை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.
எனக்கு உண்மையில் என் அம்மா தேவை, அவள் என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட எந்த நிலையிலும், இனி இருக்கமாட்டார் என்பது தெரியும். இதனால் தற்போது என்னால் முடிந்தவரை அவரை மகிழ்ச்சியடையச் செய்வதிலும், சிரிக்க வைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
Martha Sepúlveda வரும் ஞாயிற்றுக் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு கருணை கொலை செய்யப்படுவார். இந்த திகதியையும் அவர் தான் தேர்வு செய்து கொடுத்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.