190 சிறுமிகள் சீரழித்து கொலை! உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய ஒரு கொடூர குற்றவாளிக்கு விடுதலையா? எழுந்த கடும் எதிர்ப்பு
கொலம்பியாவில் 190க்கும் அதிகமான சிறார்களை சீரழித்து கொலை செய்த கொடூர குற்றவாளியை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் சீற்றத்தை எழுப்பியுள்ளது.
Luis Alfredo Garavito என்ற நபருக்கு தற்போது 64 வயதாகிறது. இவர் கடந்த 1992ல் இருந்து 1999 வரை 8ல் இருந்து 16 வயது வரையிலான 190க்கும் அதிகமான சிறுவர், சிறுமிகளை சீரழித்து கொன்றுள்ளார்.
பல சமயங்களில் பிச்சைக்காரன் போலவும் துறவி போலவும் வேடமிட்டு சிறுமிகளை அணுகும் Luis அவர்களுக்கு பணம் அல்லது குளிர்பானம் கொடுத்து கவரும்படி அன்பாக பேசுவார். பின்னர் அவர்களை தனது இடத்துக்கு அழைத்து சென்று சொல்ல முடியாத வகையில் சித்திரவதை செய்து, சீரழித்து பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
இந்த தொடர் சம்பவங்கள் அப்போது கொலம்பியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவரை பொலிசார் கடந்த 1999ஆம் ஆண்டு கைது செய்தனர். Luisக்கு மொத்தமாக 835 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டது.
சிறையில் இருக்கும் Luis-ஐ அங்கிருந்து முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான முன்மொழிவு தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் கொலம்பியாவில் சிறை தண்டனை என்பது 40 ஆண்டுகள் வரை தான் என ஒரு கட்டுபாடு உள்ளது. மற்றும் பாதிக்கு மேல் தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் பிறகு நல்ல நடத்தைக்காக முன்கூட்டியே விடுவிக்கவும் அங்கு அனுமதிப்படுகிறது.
அதன்படி தேசிய சிறைக் கழகம், சிறையில் Luis முன்மாதிரியான நடத்தையுடன் இருக்கிறார் எனவும் அவரை தற்காலிகமாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் சிபாரிசு செய்துள்ளது.
இந்த வேண்டுகோளானது நாட்டு மக்களை கொந்தளிக்க செய்துள்ளது, இந்தளவுக்கு இரக்கமற்ற கொடூர குற்றவாளியை விடுதலை செய்ய எப்படி கோரலாம் என மக்கள் கொந்தளித்துள்ளனர்.
ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு $41,500 என்ற அபராதத்தை Luis இன்னும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதனிடையில் சிறைக்கழகத்தின் இந்த செயலுக்கு நாட்டின் ஜனாதிபதி Iván Duque கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அந்த மிருகம் சிறையை விட்டு வெளியேற வேண்டும் என்று யாரேனும் ஆலோசனை கூறினால் அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தும்.
தேசிய அரசாங்கம் அதற்கு என்றும் ஆதரவு கொடுக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.