கொழும்பு துணிக்கடையில் ரகசிய கேமரா: கையும் களவுமாக சிக்கிய உரிமையாளர்
கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள துணிக்கடையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய கேமரா
கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் உள்ள துணிக்கடை ஒன்றின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட உரிமையாளரின் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலங்கம பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கைபேசியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்
கைதுக்கு பிறகு சந்தேக நபரின் கைப்பேசியை சோதனையிட்ட பொலிஸார், திடுக்கிடும் வகையில் உடை மாற்றும் அறையில் மறைத்து வைத்து பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த 201 வீடியோக்களில், பெண்கள், சிறுமிகள், இளம் பெண்கள் ஆகியோரின் உடை மாற்றும் காட்சிகள் இருந்ததாகவும், வீட்டின் குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும் வீடியோ ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கைப்பற்றப்பட்ட காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதா அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டு வலைதளங்களுக்கு விற்கப்பட்டு உள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |