ரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் கண்பார்வை பறிபோகுமா?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில் ரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் கண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் பார்க்கலாம்.
ஏற்படும் பாதிப்புகள்
கண்கள் தற்காலிகமாக சிவந்து போகும், தீக்காயம் பட்ட்து போல் எரிச்சல் அடையும். கண்களில் வலி, ஒளிச்சேர்க்கை மற்றும் மங்கலான பார்வை போன்றவை ஏற்படலாம்.
குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்தால், அரிதான சமயங்களில் நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.
கண்கள் சிவந்து போதல், கண்களில் நீர் வடிதல் மற்றும் அசௌகரியமாக உணர்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
அரிப்பு, வீக்கம், சிவத்தல் மற்றும் படை நோய் போன்ற அலர்ஜிகள் ஏற்பாடும்.
கண்களில் பட்டால் என்ன செய்வது?
வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கண்களைச் சுத்தப்படுத்தவும். மேலும் பரவாமல் இருக்க கண்களை தேய்க்காமல் இருக்க வேண்டும்.
கண் இமைகளில் இருக்கும் அதிகப்படியான சாயத்தை சுத்தமான துணி அல்லது துடைப்பான்கள் மூலம் மெதுவாக துடைத்து எடுக்கவும்.
வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க ஐஸ்கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள்.
கண் எரிச்சல் , வலி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை சென்று பாருங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |