ப்ளீஸ்... என் தொகுதியிலும் வந்து பிரசாரம் செய்யுங்க! பிரதமர் மோடிக்கு பிரபல திமுக வேட்பாளர்கள் அழைப்பு
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் ஏ.வ.வேலு இந்திய பிரதமர் நரேந்திய மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் புதுச்சேரியுலும், தாராபுரத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வோட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இன்று மதுரையில் பிரசாரம் செய்யவுள்ளார்.
அதேசமயம், தமிழக பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்களில் மோடி பெயரை தவிர்த்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை முன்நிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது மோடி ஆதரவாளர்களிடையே சற்று கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களுக்கு மோடி மீதுள்ள அதிருப்தி காரணமாகவே சொந்த கட்சிகாரர்களே அவரை தவிர்ப்பதாக எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.வ.வேலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் வாயிலான அழைப்பு ஒன்றை விடுத்தள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, அன்புள்ள பிரதமர் மோடி, ப்ளீஸ் திருவண்ணாமலையில் பிரசாரம் செய்யுங்க.
Dear Prime Minister @narendramodi, please campaign in Thiruvannamalai. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
— E.V. Velu (@evvelu) April 2, 2021
நான் தான் அத்தொகுதியின் திமுக வேட்பாளர், நீங்கள் பிரச்சாரம் செய்தால் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற உதவும்.
உங்களுக்கு நன்றி ஐயா என நையாண்டி செய்துள்ளார். சமீபத்தில் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டியும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Dear Prime Minister @narendramodi , please campaign in Thiruvannamalai.I am the DMK candidate here in Kilpennathur AC and it will help me in widening my winning margin.
— Pitchandi K (@PitchandiK) April 2, 2021
Thank you sir.
