தவறு செய்துவிட்டோம்... மீண்டும் வாருங்கள் ரிஷி சுனக்: வைரலாகும் சமூக ஊடக செய்தி
பிரித்தானிய முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கின் சமூக ஊடக இடுகைகளில், ’மீண்டும் வாருங்கள் ரிஷி’ என அழைக்கும் செய்திகள் நிரம்பி வழியத் துவங்கியுள்ளன.
மீண்டும் வாருங்கள் ரிஷி
கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மட்டுமின்று, கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார் ரிஷி.
அதற்குப் பின் Goldman Sachs என்னும் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக இணைந்த ரிஷி, தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார்.
சமீபத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற Wensleydale Show என்னும் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரிஷி.
அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார் ரிஷி.
விடயம் என்னவென்றால், அவரது இடுகைகளில் கருத்துக்களை பதிவிட்டுள்ள பலர், ’மீண்டும் வாருங்கள் ரிஷி’ என்னும் ரீதியில் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.
# come back rishi https://t.co/koqZlfNoTa
— melele (@melele129996) August 30, 2025
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என நீங்கள் கூறியது சரிதான், தவறு செய்துவிட்டோம், மீண்டும் வாருங்கள் ரிஷி என பலரும் ரிஷிக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
லேபர் கட்சி சார்பில் பிரதமரான கெய்ர் ஸ்டார்மருக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது.
இடைத்தேர்தல்களில் லேபர் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்துவருவதாலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும், மூன்றாவது முறையாக தனது தனிச்செயலரை மாற்றியதாலும் ஸ்டார்மருக்கு மக்களிடையேயும், தனது கட்சியிலும் எதிர்ப்பு உருவாகிவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ரிஷி சுனக்கை மீண்டும் வருமாறு மக்கள் அழைக்கும் செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவருவது குறிப்பிடத்தக்க செய்தியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |