சாலையில் இருந்த பிச்சைக்காரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்வந்தர்! பெரும் கவனத்தை ஈர்த்த வீடியோ
நைஜீரியாவில் பெரும் செல்வந்தர் ஒருவர் பிச்சை எடுக்கும் பெண் தன் மீது காட்டிய கருணைக்காக பெருந்தொகை ஒன்றை பரிசாக கொடுத்த நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
டி ஜெனரல் என்பவர் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும் செல்வந்தரான இவர் சாலையில் சென்ற போது பெண்ணொருவர் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை கண்டார்.
உடனே அவரிடம் சென்ற டி ஜெனரல், தனக்கு பசிக்கிறது எனவும் எதாவது பணம் இருந்தால் கொடுத்து உதவுமாறும் அந்த பிச்சைக்காரியிடம் கேட்டார். இதையடுத்து சற்று யோசிக்காத அந்த பெண் நேற்றைய தினம் தான் பிச்சை எடுத்து வைத்திருந்த பணத்தை அப்படியே டி ஜெனரலிடம் கொடுத்தார்.
இதற்கு நன்றி சொன்ன டி ஜெனரல், நன்றி அம்மா, இந்த பணத்தை வைத்து நான் சாப்பிடுவேன் என கூறினார். இதன்பின்னர் பிச்சை எடுத்த பெண்ணின் கருணை உள்ளத்தை நினைத்து நெகிழ்ந்து போனார் டி ஜெனரல்.
பின்னர் அவர் அருகே சென்ற டி ஜெனரல், நான் நல்லவர்களை கண்டுபிடிக்கவே இப்படி செய்தேன் என கூறி பிச்சைக்காரி தந்த பணத்தை திரும்பி அவரிடமே கொடுத்தார்.
மேலும் தனது கையில் இரண்டு பணக்கட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார் டி ஜெனரல். அதில் ரூ 90,000 (இலங்கை மதிப்பில்) அளவுக்கு பணம் இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதனை பார்த்த பலரும், அன்பு தான் எல்லாம், உங்கள் இருவர் செயலும் பாராட்டுதல்குரியது என பதிவிட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022