70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய வால்நட்சத்திரம்! பூமியை நெருங்கியதாக தகவல்
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் 1385ஆம் ஆண்டில் தோன்றிய '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' எனும் வால் நட்சத்திரம், 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும் தோன்றியதாகும் தென்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.
தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன விண் பொருளான வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிய நிகழ்வாகும்.
இது சுமார் 30 கிலோ மீற்றர் நீள மையப் பகுதியைக் கொண்டது என்றும், தற்போதே இது தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனைப் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூன் மாதம் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் இந்த வால் நட்சத்திரம், மேற்கு அடிவானத்தில் தென்படும் என்றும், இனி 2095ஆம் ஆண்டில் தான் தோன்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |