காமன்வெல்த் விளையாட்டுகள்... முக்கிய முடிவெடுத்த கனேடிய மாகாணம்
கனடாவில் காமன்வெல்த் விளையாட்டுகள் இணைந்து நடத்துவதில் இருந்து கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் விலகுவதாக அறிவித்துள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணம் விலகுவதாக
எதிர்வரும் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கனடாவில் பல்வேறு மாகாணங்களில் நடத்த முடிவான நிலையில், தற்போது ஆல்பர்ட்டா மாகாணம் விலகுவதாக தெரிவித்துள்ளது.
@alamy
2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்துவதில் இருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் விலகுவதாக அறிவித்த ஒரு வாரத்தில் ஆல்பர்ட்டாவும் இந்த முடிவை அறிவித்துள்ளது.
இதில் பெருந்தொகை செலவிட வேண்டிய நெருக்கடி இருப்பதாலையே, விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்டா மாகாணங்கள் விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் நிலையில்,
மக்கள் வரிப்பணத்தை செலவிடுவது
விளையாட்டுப் போட்டிகளுக்காக மக்கள் வரிப்பணத்தை செலவிடுவது முறையல்ல எனவும் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இதே காரணத்தை குறிப்பிட்டு, ஹாமில்டன் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களும் விலகியுள்ள நிலையில், காமன்வெல்த் விளையாட்டுகள் அமைப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
@AP
ஆல்பர்ட்டா மாகாணத்தின் முடிவு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றாலும், அவர்களின் முடிவை மதிக்கிறோம் என காமன்வெல்த் விளையாட்டுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் விக்டோரொயா மாகாண முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவிக்கையில், 2026ல் காமன்வெல்த் விளையாட்டுகளை முன்னெடுக்க 2.6 பில்லியன் டொலர் அளவுக்கு செலவிட திட்டமிட்டிருந்த நிலையில்,
தற்போது 6 முதல் 7 பில்லியன் டொலர் செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதை அடுத்தே, விலகும் கடினமான முடிவை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |