AI ChatGPT: கோடி ரூபாய் சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்களுக்கு தொழில் நிறுவனங்களில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரையிலான சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் காத்து இருக்கின்றன.
திறக்கும் புதிய வேலை வாய்ப்பு கதவுகள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் (AI ChatGPT) நிபுணத்துவம் அடைந்த நபர்களுக்கான தேவை உலக அளவிலான பெரு நிறுவனங்களில் அதிகரித்துள்ளது.
Resume Builder-ன் சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி, செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் தொழில் நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்தலாம், மேலும் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்ற நோக்கில் உலகின் 91% நிறுவனங்கள் தற்போது தங்களிடம் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு AI ChatGPT தொழில்நுட்பத்தை அறிந்த நபர்களுக்கு ஒதுக்கியுள்ளது.
இது உலக அளவில் வளர்ந்து வரும் தேவை மற்றும் கவர்ச்சிகரமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
சில தொழில் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம்(ChatGPT) பெற்ற ஊழியர்களுக்கு ஊதியமாக 1,85,000 அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 1.5 கோடி) வரை கொடுக்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களில் Interface.ai என்னும் AI வடிவமைப்பாளர்கள், இயற்கை மொழி செயலாக்க நிபுணர்கள் மற்றும் ChatGPT போன்ற பெரிய அளவிலான பெரிய மொழி உரையாடல் மாடல்களை உருவாக்க கூடிய இயந்திர கற்றல் போன்றவற்றில் திறன் படைத்த நபர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.
வேலை இழக்கும் கவலையில் சிலர்
இதற்கிடையில் வேகமாக வளர்ந்து வரும் ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்கள், பல்வேறு துறைகளில் கால் பதித்து வருவதால் பலர் தங்களது வேலை பறிபோகி விடக்கூடும் என்ற கவலையில் உள்ளனர்.
ஆனால் அதே சமயம் இந்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Getty
இந்நிலையில் Chat GPT போன்ற AI ஆகியவற்றிற்கான ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் படிப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.
எப்படி இருப்பினும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டு இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |