ஊழியர்களுக்கு சிக்கல்.., TCS நிறுவனத்திற்கு பிறகு WFH கொள்கையில் மாற்றத்தை அறிவித்த பிரபல நிறுவனம்
ரத்தன் டாடாவின் டி.சி.எஸ் நிறுவனத்திற்குப் பிறகு, இந்த நிறுவனம் அதன் WFH கொள்கையில் பெரிய திருத்தத்தைக் கொண்டுவருகிறது.
எந்த நிறுவனம்?
வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) கலாச்சாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பிரபல நிறுவனம் ஒன்று WFH கொள்கையில் பெரிய திருத்தத்தைக் கொண்டுவருகிறது.
அதன்படி, WFH -யை ரத்து செய்த நிறுவனம் ஊழியர்கள் குறைந்தபட்சம் 3 நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.
ரத்தன் டாடாவின் டி.சி.எஸ் நிறுவனத்திற்குப் பிறகு, சத்யா நாதெல்லாவின் மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஊழியர்களுக்கு ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விதியின்படி, WFH-க்காக பணியமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். இந்த புதிய விதி பிப்ரவரி 2026 முதல் அமலுக்கு வருகிறது.
அறிக்கைகளின்படி, முதலில் சியாட்டில் உள்ள ஊழியர்கள் செப்டம்பர் 2025 க்குள் இந்த விதியை கடைப்பிடிப்பார்கள் என்றும், பின்னர் அமெரிக்காவில் உள்ள பிற அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த விதி உலகெங்கிலும் உள்ள அனைத்து சர்வதேச அலுவலகங்களில் பிப்ரவரி 2026 க்குள், செயல்படுத்தப்படும்.
இருப்பினும், கணக்கு மேலாண்மை, ஆலோசனை மற்றும் கள சந்தைப்படுத்தல் போன்ற சில பணிகளைத் தவிர அனைவருக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும்.
ஏனெனில் இந்த பதவிகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வெளிப்புற வாடிக்கையாளர்களுடன் பணிபுரிவதில் செலவிடுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |