வெறும் 5 நாட்களில் ரூ 47,000 கோடியை அள்ளிய ஒரு பிரபல நிறுவனம்... ரிலையன்ஸ், டாடா குழுமமல்ல
பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் கடந்த வாரம் தங்கள் சந்தை மதிப்பில் பெரும் ஆதாயாத்தை ஈட்டியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் சாதனை
கடந்த வாரம் மும்பை பங்குச்சந்தையும் உச்சம் தொட்டுள்ளது. மட்டுமின்றி, மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 8 எண்ணம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் TCS நிறுவனங்கள் பெரும் ஆதாயம் ஈட்டியுள்ளது.
இதில் சுனில் பார்தி மிட்டலின் பார்தி ஏர்டெல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதன் சந்தை மதிப்பு வெறும் 5 நாட்களில் ரூ 47,194.86 கோடி அதிகரித்து தற்போது ரூ 9,04,587.12 கோடி என உயர்ந்துள்ளது.
ஆகஸ்டு 30ம் திகதி வர்த்தகம் முடியும் போது பார்தி ஏர்டெல் பங்கின் விலை ரூ 1,584 என பதிவானது. இதனால் பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான 5 நாட்களில் மட்டும் அதன் சந்தை மதிப்பில் ரூ 47,000 கோடி தொகையை ஈர்த்துள்ளது.
முதலிடத்தில் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் தங்களின் சந்தை மதிப்பில் ரூ 13,396 கோடியை சேர்த்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 20,43,107.10 கோடி.
இந்தியாவில் மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 8-ன் மொத்த சந்தை மதிப்பில் ரூ 1,53,019.32 கோடி கடந்த ஒரே வாரத்தில் அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் தங்களின் சந்தை மதிப்பில் ரூ 33,611 கோடியை சேர்த்துள்ளது.
TCS நிறுவனத்தின் சந்தை மதிப்பும் ரூ 31,784 கோடி அதிகரித்துள்ளது. ICICI வங்கியின் சந்தை மதிப்பும் ரூ 18,734 கோடி அதிகரித்துள்ளது. இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முதலிடத்தில் தற்போதும் ரிலையன்ஸ் நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |